ஆசிய விளையாட்டுப் போட்டி : தமிழகம் மூன்றாம் இடம்..!!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொறந்து தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம். அந்த 69 பதக்கங்களை 184 வீரர்கள் வென்றனர். அதாவது அணியாக விளையாடி போட்டிகளில், ஒவ்வொருவரையும் தனித்தனி வெற்றியாளராகக் கருதினால், மொத்தம் 184 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.
ஹாக்கி, கபடி, செபக் டெக்ரா, தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுகளில் நிறைய வீரர்கள் பங்கேற்பதால், பதக்கம் வென்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 4X 400 தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் 2 பேர் பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆண் கள் அணிக்காகப் பதக்கம் வென்ற 3 பேருமே தமிழக வீரர்கள்- சத்யன், சரத் கமல், அமல்ராஜ்.
அதே போல் ஸ்குவாஷ் பெண்கள் அனுப்பி பிரிவில் பதக்கம் வென்ற நால்வரில் 3 வீராங்கனைகள் தமிழகத்தைசேர்ந்தவர்கள் . அதுமட்டுமல்லாமல், ஸ்குவாஷ் ஒற்றையர், பாய்மாராப் படகோட்டுதல், டென்னிஸ் போன்ற பிரிவுகளிலும், தமிழக வீரர்கள் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினார்.