ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்; இந்தியாவின் 53 வருட கனவை நனவாக்கிய லக்ஷயா சென் !!
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் 53 வருட கனவை நிவர்த்தி செய்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன்ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் லக்ஷயா சென் தாய்லாந்தின் குன்லாவுத்விடிஸ்டிரானை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென், முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார்.தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய லக்ஷயா சென், 21-18 என வென்றார்.
முடிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தாய்லாந்தின் குன்லாவுத் விடிஸ்டிரானை 21-19, 21-18 எனவெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதன் மூலம் சுமார் 53 ஆண்டுக்கு பின் ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர்பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். முன்னதாக கடந்த 1965ல்இந்தியாவின் கவுதம் தகார் தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோல பிரனாப் சோப்ரா, பிரஜ்கா சவாந்த் ஆகியோர் கடந்த 2009ல் வெண்கலப்பதக்கமும், 2011ல்சமீர் வெர்மா (வெள்ளிப்பதக்கம்), பி.வி. சிந்து (வெண்கலப்பதக்கம்), 2012ல் பி.வி.சிந்து (தங்கம்), சமீர்வெர்மா (வெண்கலப்பதக்கமும்) வென்றுள்ளனர்.