ஆசியா விளையாட்டு பெண்கள் மல்யுத்தம் : தங்கம் வென்ற தங்கப்பெண்மணி வினேஷ் போகத்….!!!

Default Image

ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் யூனியா பெற்றிருந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கமும் மல்யுத்தத்திலேயே கிடைத்துள்ளது.
போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்கள் மல்யுத்தத்தில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது முதல் சுற்றில் 8-2 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யணன் சன்னை தோற்கடித்தார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் அவருடன் மோதி காயத்துடன் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பழி தீர்த்து கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் காலிறுதியில் 11-0 என்ற கணக்கில் ஹியன்ஜூ கிம்மையும், அரையிறுதியில் 10-0 என்ற புள்ளிகணக்கில் யாக் ஹிமுரடோவாவையும்  பந்தாடினர்.
இதன்பின்னர், இறுதிப்போட்டியில் யுகி அரியை எதிர்கொண்ட வினேஷ் போகத் அதிலும் எதிராளிகளை மடக்கி பிராமாதப்படுத்தினர். முடிவில் 6-2 என்ற கணக்கின் முடிவில் தங்க பதக்கத்தை கைப்பற்றி தங்க பதக்கத்தை வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

வினேஷ் போகத் கூறுகையில், இந்த முறை தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு போராடி, கடவுளின் கருணையால் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
பதக்கபட்டியலில் சீனா முதலிடமும்,  ஜப்பான் இரண்டாவது இடமும், இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்