ஆக்ரோச குரலில் சூர்யா…..சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published by
kavitha
  • இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம்
  • சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருமகின்ற  நிலையில் தான் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.ஜிவி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சூர்யா பாடும் வீடியோ ஒன்றும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு ஆக்ரோசமாக பாடுவது யார் சூர்யாவா என்று எல்லாரும் ஆச்சரியம் படும் வண்ணம் உள்ளது.சூர்யாவின் சொந்தக்குரலில் மாறா தீம் வீடியோ குறித்த் அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

Recent Posts

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

7 minutes ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

59 minutes ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

2 hours ago

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…

10 hours ago

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

12 hours ago

வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…

12 hours ago