அவர் மறக்கலாம் நான் மறக்க மாட்டேன்! சச்சின் குறித்து பிரபல நடிகர் கருத்து!

- இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் விமானத்தில் வந்ததாக நடிகர் இயக்குனர் பிரித்திவிராஜ் கூறினார்.
- ஒரு ரசிகராக அவருடன் பயணம் செய்தது எனக்கு தற்போதும் நினைவில் உள்ளது. அவர் மறந்தாலும் நான் அந்த நிகழ்வை என் வாழ்வில் மறக்க மாட்டேன் எனவும் கூறினார்.
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், மோகன்லாலை வைத்து லூசிஃபர் எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராகவும்வலம் வருகிறார் நடிகர் இயக்குனர் பிரித்திவிராஜ். இவர் அடுத்தடுத்து மலையாள சினிமாவில் பிசியாக இருக்கிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘நான் சச்சினுடன் கொச்சி முதல் மும்பை செல்லக்கூடிய விமானத்தில் அவருடன் அருகில் பயணித்தேன். அப்போது அவரிடம் பேச தயக்கமாக இருந்தது. பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடன் பேசினேன். பின்னர் மும்பை சென்று இறங்கும் வரை அவருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த உரையாடலை ஒரு ரசிகராக நான் எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன்.
ஒரு சினிமா பிரபலமாக கிரிக்கெட் பிரபல வீரராக தனது அத்தனை ரசிகர்களையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அது போல அவர் என்னை மறந்தாலும் ஒரு ரசிகராக நான் இந்த சந்திப்பை மறக்க மாட்டேன் எனக் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025