அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இருக்கும் மலை கொரில்லா..!
உகாண்டா நாட்டில், அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இருக்கும் மலை கொரில்லாவின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உகாண்டா, காங்கோ நாடுகளில் சிம்பன்சி உள்ளிட்ட எண்ணற்ற குரங்குகள் வகைகள் வாழ்ந்து வருகின்றன. அதில், மலை கொரில்லா குரங்குகள் பருவநிலை மாற்றம், நகரமயமாதல் காரணங்களால் மிகவும் அரிய உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்தது.
இந்த கொரில்லா இனத்தை பாதுகாக்கும் வகையில் உகாண்டாவில் உள்ள தேசிய பூங்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவால், கடந்த 2010 ஆம ஆண்டு வெறும் 480 மலை கொரில்லாக்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது.