அரசு நிலத்தில் குடியேறும் பொதுமக்கள் பிரான்ஸ் நாட்டில் நூதன முறையில் போராட்டம் .!
அரசு நிலத்தில் குடியேறும் பொதுமக்கள் பிரான்ஸ் நாட்டில் நூதன முறையில் போராட்டம் நடத்தியதால் போலீசார் திணறிப் போயினர்.
நான்டஸ் என்ற இடத்தில் கைவிடப்பட்ட விமானநிலையத்தில் குடியேற முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் போராட்டக்காரர்கள் கூடியதால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆனால் எதிர்பார்த்ததிற்கு மாறாக போராட்டம் நடத்தவந்தவர்கள் இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.
கவச உடை, பாதுகாப்பு உபகரணங்கள் என முழு அளவில் தயாராக வந்திருந்த போலீசார் போராட்டக்காரர்கள் நடனமாடியதால் அவர்களை கைது செய்ய காரணமின்றி தவித்தனர். இறுதியில் இரு தரப்பினரும் பிரிந்து சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.