அய்யோ என்ன சென்ராயன் இப்படி பண்ணிட்டீங்களே ..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் நித்தியா விற்கும் இடையே சமையலின் போது பிரச்சனை ஏற்ப்பட்டது.
தற்போது அதை தொடர்ந்து மும்தாஜ் மற்றும் சென்ராயன் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ரசிகர்கள் அனைவருக்கும் மும்தாஜ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது “கட்டிப்புடி கட்டிப்புடி டா” என்ற பாடல் தான்.இந்த பாடலை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாட, மும்தாஜ் உடன் சென்ராயன் நடனமாடினார்.
இதைத்தொடர்ந்து ‘நான் மும்தாஜ் உடன் டான்ஸ் ஆடிவிட்டேன்’ என மகிழ்ச்சியில் சென்ராயன் துள்ளிக்குதிக்க உடனே கதறி அழுகிறார் மும்தாஜ்.உடனே ஏன்டா இப்படி பண்ணுற,முதல்ல வெளிய போடா என்று கோபமாக சென்ராயனை திட்டி வெளியே அனுப்பினார் மஹத்.
இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரளயமே வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.