அயர்லாந்தில் கருக்கலைப்பு 66.4 % மக்கள் ஆதரவு..!!நாட்டின் அமைதிப் புரட்சி..!!- பிரதமர் லியோ பேச்சு..!!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம்கொண்டு வருவதற்கான வாக்குப்பதிவு அந்நாட்டில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வாக்களித்தனர்.
இறுதியில், 66.4 % மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் லியோ வரத்கர் தெரிவிக்கையில், இதை அயர்லாந்து நாட்டின் அமைதிப் புரட்சி என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்