அமைச்சருக்கு செக் வைத்த ஸ்டாலின் : 'அதிமுகவுக்கு கூடுதல் சிக்கல்' "சவாலை ஏற்ற திமுக" தொடங்கியது ஸ்டாலின் அதிரடி..!!

Default Image

சென்னை, அக்.2- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயம்புத்தூரில் மட்டும் பெறப்பட்ட 3000 பக்க ஆதாரங்களுடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி தி.மு.கழகத்தின் சார்பில் வாதாடவிருக்கிறார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 10.9.2018 அன்று அவர் சார்ந்த துறையில், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பினாமிகள் ஆகியோர் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள்  சட்டத்திற்குப்புறம்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி, தி.மு.க சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் கண்காணிப்பு இயக்குநருக்கு மனு ஒன்றை அளித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாம் ஊழல் எதுவும் செய்யவில்லை என்றும் ஆதாரம் இருந்தால் தன்மீது வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சவால் விட்டிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில்,கோயம்புத்தூரில் மட்டும், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட ஊழல்கள் தொடர்பாக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தயார் செய்து அவற்றின் அடிப்படையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த 3,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் கழக அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ். பாரதி சார்பில் மனு ஒன்று திங்களன்று (1.10.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Image result for கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக கூடுதலான ஆவணங்கள் சேகரிக்கின்றனர் திமுகவினர்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த வழக்கில் தி.மு.கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடவிருக்கிறார். இது மட்டுமின்றி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்கள் தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆவணங்களும் விரைவில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று திமுக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அதிமுகவிற்கு கூடுதல் சிக்கல் உருவாகி உள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்