அமெரிக்க விமானம் ஜப்பான் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது!
அமெரிக்க விமானப்படையின் F-15 ரக விமானம் ஜப்பான் கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது. ஜப்பானின் ஓகினாவா தீவுப்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ முகாம் அமைந்துள்ளது.
இந்த தீவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் F-15 ரக விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. எனினும் விமானி, அவசரகால வழியை பயன்படுத்தி தப்பி விட்டதாகவும் சிறுகாயங்களுடன் அவர் மீட்கப்பட்டதாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.