அமெரிக்க ராணுவம் சிரியாவில் முகாமிடுவதை உறுதி செய்தது அமெரிக்கா.!
அமெரிக்கா சிரியாவில் தங்கள் நாட்டு ராணுவம் முகாமிடுவதை உறுதி செய்துள்ளது.
சிரியாவில் போராளிக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி பொதுமக்கள் மீது விஷவாயு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து சிரியாவுக்கு ஆதரவளிக்கும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் பனிப்போர் வெடித்துள்ளது.
இந்நிலையில் ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, சிரியாவில் அமைதி திரும்பும் வரை அமெரிக்க துருப்புக்கள் முகாமிட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ரசாயனத் தாக்குதல் நடக்காத வண்ணமும், சிரியாவில் பதுங்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் வரையில் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.