அமெரிக்க ராணுவத்தில் விரைவில் எல்லா துறைகளிலும் ரோபோக்கள் அறிமுகம்..!

Default Image
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன், நீண்ட காலமாக ரோபோக்கள் குறித்த ஆராய்ச்சியை செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களை பென்டகன் வடிவமைத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அணு ஆயுத தாக்குதலை முன்பே கணிக்கும் ரோபோக்களை உருவாக்கவும் அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. ராணுவத்தில் குறைந்த அளவு மனிதர்களையும், அதிகளவு ரோபோக்களையும் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும் என்றும், ரோபோக்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, அமெரிக்காவில் பெரும்பாலான ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் குண்டுகளை அகற்றும் போது தான் மரணம் அடைகிறார்கள். எனவே இதனை தடுக்கும் வகையில்,இதற்கும்  ரோபோக்களை பயிற்சி அளிக்கவும் அந்நாட்டு ராணுவம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் குண்டுவெடிப்பை தடுக்கவும், எத்தகைய குண்டுகளையும் எளிதாக செயலிழக்க செய்யும் ரோபோக்களை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஐந்து படைகளுடன் 6-வது படையாக ரோபோக்களை சேர்க்க உள்ளதாகவும், சில மாதங்களில் அதற்காக சோதனை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எவ்வாறு நடைமுறைபடுத்தப்படும் என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்