அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ. புஷ்-ஷின் மனைவி பார்பரா புஷ் காலாமானார்!
அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி பார்பரா புஷ் (Barbara Bush) காலாமானார். அவருக்கு வயது 92. அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவரது மனைவி பார்பரா புஷ். இந்த தம்பதியின் மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், அமெரிக்காவின் 43-வது அதிபராவார். பார்பரா புஷ் அண்மைக்காலமாக நுரையீரல் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றிரவு காலமானார். பார்பரா புஷ், அமெரிக்காவின் முன்னாள் அதிபரின் மனைவி, மற்றொரு அதிபரின் தாயார் என்ற பெருமை கொண்ட ஒரே ஒரு பெண்மணியாவார். அவரது மறைவுக்கு டொனால்டு டிரம்ப், கிளின்டன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.