அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் ராஜினாமா..!!
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதற்காக அங்கு சென்ற அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் கடும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வரும் பிப்ரவரி மாத இறுதியோடு, ஜேம்ஸ் மாட்டீஸ் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.