அமெரிக்க நீதிபதி பதவிக்கு இந்திய பெண்..டிரம்ப் அறிவிப்பு….!!

Default Image

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

அமெரிக்காவில் பல பெண்களின் பாலியல் புகார்களுக்கு ஆளானவர் நீதிபதி பிரெட் கவனாக் (வயது 53). அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அவர் கடந்த மாதம் 6–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த வாஷிங்டன் மாகாணம், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவி காலியானது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவது இந்த கோர்ட்டு ஆகும்.இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (வயது 45) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில், ‘‘கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்’’ என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், ‘‘செல்வாக்கு மிக்க அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்’’ என குறிப்பிட்டார்.நியோமி ராவ் தேர்வு பற்றிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973–ம் ஆண்டு, மார்ச் மாதம் 22–ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்தார். டெட்ராய்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி டிரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்