அமெரிக்க நாடாளுமன்ற குழு கேள்விகளுக்கு அதிரடி பதிலளித்த சுந்தர் பிச்சை…!!

Default Image

கடந்த வாரம் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையிடம் 4 மணி நேரம் கூகுளை பற்றி பல கேள்விகளை கேட்டது அமெரிக்க நாடாளுமன்ற குழு . அனைத்திற்கும் மிக பொறுமையாக பதிலளித்தார் சுந்தர்பிச்சை.
அதில் ஒரு கேள்வி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றியது…
இடியட் (idiot) என்ற வார்த்தையை டைப் செய்தால், வெளியாகும் படங்களில் அதிபர் டிரம்ப்பின் புகைப்படங்களும் வருவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு சுந்தர்பிச்சை அளித்த பதில் ‘‘கூகுள் தேடு தளத்தை பொறுத்தவரை கணிப்பு நெறிமுறைப்படி(Algorithm) தான் செயல்படுகிறது. இந்த முறையில் ஒரு வார்த்தையை தேடும்போது, ஆயிரக்கணக்கான வெப்சைட்களில் உள்ள தகவல்கள் ஒன்று திரட்டப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
எடுத்துக்காட்டாக யாராவது ஒருவர் இடியட்(idiot) என்ற பெயரில் அதிபர் டிரம்ப் படத்தை ஒரு வெப்சைட்டில் சேர்த்திருந்தால், அந்த படம் முடிவுகளாக வெளிவரும்.
புதிதாக சேர்க்கப்பட்டவை, தொடர்புடையவை, பிரபலம் என்ற அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகும். 200 சிக்னல்களை பயன்படுத்தி, இந்த முடிவுகளை கூகுள் பட்டியலிடுகிறது. இதற்கு மெடா டேக் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர், டிரம்ப் போட்டோவை இடியட் என்ற பெயரில் அப்லோடு செய்திருப்பதால், அவரது போட்டோ வெளியாகிறது’’ என்று சுந்தர்பிச்சை கூறினார்.அவரிடம் அமெரிக்க எம்.பி.க்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர். சுந்தர் பிச்சையும் எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார்.
பின்பு சுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு உங்களிடம் கேள்விகேட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சுந்தர் பிச்சை வயதான எம்.பி.க்களுக்கு இன்டர்நெட் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு என்னால் முடிந்த விளக்கம் அளித்தேன் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்