அமெரிக்க சிரியாவிலிருந்து படைகள் வெளியேறுவது குறித்து முடிவு ….!
அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டேன் கோட்ஸ்(Dan coats) சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எதிர்கால நடவடிக்கை குறித்த முக்கிய முடிவு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து வாஷிங்டனில் அமெரிக்க செனட் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய Dan Coats, சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது குறித்து ஒருமித்த கருத்துடன் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார். சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதையே தான் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.