அமெரிக்க உள்கட்டமைப்பு, ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்க திட்டம்!அமெரிக்க பட்ஜெட்……
உள்கட்டமைப்பு, மெக்சிகோ எல்லையில் சுவர் அமைத்தல் ஆகியவற்றுக்கு அமெரிக்க பட்ஜெட்டில் பெருவாரியான நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட்டில் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளது. உள்கட்டமைப்புக்கு 200 பில்லியன் டாலர்களும், மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்க 18 பில்லியன் டாலர்களும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மருத்துவத்திற்கும் அதிக நிதி வழங்கப்படப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.