அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜூலை 16இல் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ஜூலை 16இல் நடக்கிறது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கா-ரஷ்யா என்றாலே எதிரி நாடுகள் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வரும்.அதற்கு ஏற்றபடிதான் இரு நாடுகளும் தங்களுக்குள்ளான பனிப்போரை மேலும் மேலும் உயர்திக்கொண்டுதான் வருகின்றது.
இதேபோல் முன்னதாக அமெரிக்காவின் மற்றொரு எதிரி நாடக கருதப்படும் வடகொரியாவுடன் சமீபத்தில் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சு வார்த்தையால் தான் வடகொரியா தனது அணு ஆயுதத்தை ஒழிப்பதாக உறுதியளித்தது.
இந்த பேச்சு வார்த்தையை உலகமே எதிர்பார்த்து இருந்தது.தற்போது அமெரிக்கா-ரஷ்யா பேச்சு வார்த்தையையும் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதன் எதிர்பார்ப்பாகத்தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ஜூலை 16இல் நடக்கிறது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.