அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு கிம் ஜோங் உன் தயார் – வடகொரியா
வடகொரியா அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தயாராக இருப்பதாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுடனான ரகசிய பேச்சுவார்த்தையின் போது வடகொரிய பிரதிநிதிகள் இந்த தகவலை தெரிவித்ததாகவும், இரு தலைவர்களிடையேயான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறித்த தகவலை தென்கொரியா கடந்த மாதமே வெளியிட்டபோது வடகொரியா அதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.