அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுக்கு வாழ்த்து!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்ய அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாகத் தெரிவித்தார். கட்டுப்பாடு இன்றிச் செல்லும் ஆயுதப் போட்டி தொடர்பாக, புடினுடன் விரைவில் பேச்சு நடத்த விரும்புவதாக டிரம்ப் மேலும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, 19 ரஷ்ய நாட்டவருக்கு தடை விதித்துள்ள நிலையில், புடினுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.