அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வழக்கறிஞர் ஜான் டௌட் (john dowd) ராஜினாமா !

Default Image

ஜான் டௌட் (john dowd),  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வழக்கறிஞர், ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃபிஐ ராபர்ட் முல்லரை (( Robert mueller)) நியமித்தது. இந்த விசாரணையில் டிரம்ப்பின் சார்பிலான வழக்கறிஞர் குழுவிலிருந்து ஜான் டௌட் விலகியுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக இந்தக் குழுவில் உள்ள ஜான் டௌட், சக வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பதவி விலகுவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதிபர் டிரம்ப்பிடம் கலந்தாலோசித்த பின்னரே ராஜினாமா முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார். அதிபரின் நலனில் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் டௌட் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்