அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையை ‘மாஃபியா பாஸ்’ போல் நடத்துகிறார் …!
எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே எழுதியுள்ள நூலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஃபியா தலைவன் போல வெள்ளை மாளிகையை நடத்துவதாக, குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ-யின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமே A Higher Loyalty: Truth, Lies and Leadership என்ற நூலை எழுதியுள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ள இந்த நூலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, எஃப்.பி.ஐ. இயக்குநராக தாம் இருந்தபோது அதிபர் டிரம்ப் நடந்துகொண்ட முறை மாஃபியா தலைவனை நினைவூட்டியதாக ஜேம்ஸ் கோமே குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அறநெறிகள் இல்லாதவர் என்றும், உண்மைக்கும் அதிபர் பதவிக்கான மதிப்பீடுகளுக்கும் கட்டுப்படாதவர் என்றும் தமது நூலில் ஜேம்ஸ் கோமே எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.