அமெரிக்க அதிபர் சார்பில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…!
அமெரிக்க அதிபர் சார்பில் தமிழ், சிங்களம், நேபாளம் ஆகிய மொழிகளுக்கான புத்தாண்டு வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டுகள் அறுபதில் 32வது ஆண்டு விளம்பி ஆண்டு இன்று பிறப்பிக்கிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் ஜே. சுல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.