அமெரிக்கா-வடகொரிய அதிபருடனான சந்திப்பு உறுதியானது..!!தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்-அதிபர் டிரம்ப்

Default Image

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அண்மையில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் தெரிவித்திருந்தார். அதன்படி வரும் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தென்கொரியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் வாஷிங்டன்-ல் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிங்கப்பூரில் மாநாடு நடைபெறுமா என்பது அடுத்த வாரத்தில் தெளிவாகும் என்று கூறினார்.

மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்கா விதித்திருந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகொரிய அதிகாரி ஒருவர், அமெரிக்க துணை அதிபரை கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார். இதையடுத்து கிம் உடனான சந்திப்பை ரத்து செய்வதாக ட்ரம்ப் கடந்த 24-ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து டிரம்புடனான சந்திப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக கிம்ஜாங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் கிம், டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், திட்டமிட்டபடி வரும் 12ம் தேதி வடகொரிய அதிபருடன் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்