அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் சீன விண்வெளி நிலையம் விழுந்து நொறுங்கும் என்று கணிப்பு!
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் கட்டுப்பாட்டை இழந்து நச்சு வாயுக்களுடன் சுற்றித்திரியும் சீன விண்வெளி நிலையம் விழுந்து நொறுங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டியாங்காங் ஒன் (tiangong 1) விண்வெளி நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டு அதன் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு சுற்றி வருகிறது. சீனாவின் இந்த விண்வெளி நிலையம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியில் விழுந்து நொறுங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
பூமியை நெருங்கும் போது, பல பாகங்களாக எறிந்து சிதறி, நியூ யார்க், பார்சிலோனா, பீஜிங், ரோம், டோரோண்டோ உள்ளிட்ட நகரங்களில் விழக்கூடும் என்றும் தெரிவித்தனர். நச்சு வாயுக்களுடன் விழுந்து நொறுங்கினால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.