அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் சிரியா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்…!

Default Image

சிரியா மீது வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா ராணுவ கூட்டுப் படைகள்  நடத்தி வருவதால் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போரில், அவருக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கரம் கோர்த்து சண்டையிட்டு வருகின்றன. சொந்த குடிமக்கள் மீது சிரியா அரசு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரசாயன ஆயுத கிடங்குகளை அழிக்கும் நோக்குடன் சிரியாவில் தாக்குதல் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.

Image result for syria attack america france britain

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. வான் வழி மற்றும் கடல் வழி ஏவுகணை தாக்குதலில் கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.

தலைநகர் டமாஸ்கசில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையம், மேற்கு ஹோம்சில் உள்ள ரசாயன ஆயுதக் கிடங்கு மற்றுமொரு ஆயுத சேமிப்புக் கிடங்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. டொமாஹாக் ((Tomahawk)) ரக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.

Image result for syria attack america france britain

சிரியா ராணுவமும் தனது நட்பு நாடுகளுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கடல் வழியாகவும், வான் வழியாகவும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏவி இருப்பதாகவும் அவற்றில் பலவற்றை இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாகவும் சிரியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.

இந்த சூழலை அமெரிக்கா முன் கூட்டியே திட்டமிட்டு விட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் தங்களை அமெரிக்கா பயமுறுத்துவதாகவும், இதற்கான முழு பொறுப்பும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸையே சாரும் என்றும் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனாடோலி அண்டோனோவ் கண்டித்துள்ளார்.

பின் விளைவுகளில் இருந்து தப்ப முடியாத செயலை அமெரிக்கா செய்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே இந்த சண்டையில் ஏற்பட்ட பொருட் சேதம், உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்