கடந்த 8 ஆம் தேதி 10 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அமெரிக்க பயணம் சென்றிருந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்த உலக வங்கிகளிடம் ஆலோசனையையும் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.
நவம்பர் 9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு, 10-ம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கொலிஷன் சார்பில் நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழாவில் சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்- ஆசியா என்ற விருது துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது 10 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு, தற்போது தமிழகத்திற்கு திரும்புகிறார் துணை முதல்வர். அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…