அமெரிக்கா -தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்தம்!
வெள்ளை மாளிகை ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தென் கொரிய, அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தென் கொரியாவும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
இதனைத் தொடர்ந்து வடகொரியாவுடன் நட்பு பாராட்டும் விதமாக அமெரிக்காவுடன் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த உள்ள கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தாங்கள் வரவேற்பதாகவும், அதே முடிவை தாங்களும் எடுத்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.