அமெரிக்கா: ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..!!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்-சுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதை அடுத்து, தெற்கு மைனே மருத்துவமனையில் அவரை உறவினர்கள் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள மருத்துவர்கள், இருப்பினும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் வைத்து ஜார்ஜ் புஷ்சின் உடல்நிலையை கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்