அமெரிக்கா உத்தரவை மீறி ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்..!!

Default Image
புதுடெல்லி,
நீண்ட காலமாக  நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவில் ரஷியாவுக்கு தனி சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா இடையே உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் 19-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். இந்தியா வந்துள்ள புதின், இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும், மோடியும், புதினும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே, ரஷ்யாவிடம் இருந்து எஸ் -400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கைய மீறி கையெழுத்தாகியுள்ளது.  ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது.  தற்போது இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்