அமெரிக்கா- இஸ்ரேலுக்கு ஆப்பு….முஸ்லீம்களை ஒன்றிணைக்கும் ஈரான் அதிபர்…!!
அமெரிக்காவையும் , இஸ்ரேலு_வையும் வெற்றிட முஸ்லீம்கள் , முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையின் நெருக்கம்’ என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் துவக்கவுரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லீம்கள் ஒன்று திரள வேண்டும்.அமெரிக்கா நாட்டின் மூர்க்கத்தனமான அடக்குமுறையை நாம் வென்றாக வேண்டுமென்றால் முஸ்லீம்கள் ,முஸ்லீம்கள் நாடுகளுடன் ஒன்றிணைய வேண்டியதை தவிர வேறு வழி ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். சவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com