அமெரிக்கா அச்சம் ..!கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களுக்கு ரஷ்யாவால் ஆபத்து?
அமெரிக்கா , கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை சேதப்படுத்தி உலக நாடுகளின் தொலைத் தொடர்பில் ரஷ்யா பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சுகிறது. கடலுக்கு அடியில் 9 லட்சத்து 97 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இவற்றையே சுற்றி திரிவதால், கேபிள்களுக்கு ரஷ்யா பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஐரோப்பிய பிராந்தியத்துக்கான அமெரிக்கத் தளபதி, கர்டிஸ் ஸ்கபரொட்டி ((Curtis Scaparrotti)) அச்சம் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையிலான பெரும்பாலான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் சேவைகள், பணப்பரிமாற்றம் ஆகியவை கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களை நம்பியே உள்ளதால் இவற்றில் சிறு சேதம் ஏற்பட்டாலும் கூட குறிப்பிட்ட அளவு பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.