அமெரிக்கா அகதிகள் விவகாரத்தில் முக்கிய கொள்கை முடிவை கைவிட்டது!
அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பங்களைப் பிரித்து வைக்கும் எண்ணமில்லை என்று அறிவித்த நிலையில், மெக்சிகோ அகதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க எல்லையை கடந்து வரும் அகதிகளை கைது செய்து அவர்களின் குழந்தைகளை மட்டும் தனியாக அடைத்து வைத்ததற்காக டிரம்ப் அரசு மீது ஐநா.மனித உரிமைக் கவுன்சில் கடும் அதிருப்தியை வெளியிட்டது. உலகம் முழுவதும் கண்டனங்களும் வலுத்தன.
திடீரென இஸ்ரேல் பிரச்சினையை குறிப்பிட்டு ஐநா.மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து விலகிய அமெரிக்கா, தனது கொள்கை முடிவை தளர்த்தியிருக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்க விரும்பவில்லை என்று அறிவித்தார்.
அதே சமயம், வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வருவதை அனுமதிக்க முடியாது என்றும், எல்லையை பலமாக பாதுகாப்போம் எனவும் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.