அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு!
வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இயற்கை அழகும் சுற்றுலா முக்கியத்துவமும் வாய்ந்த கவாய் தீவில் தொடர்கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில் மக்கள் மீட்கப்பட்டு நிவரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதளம் மூலம் உதவி கோரப்பட்ட நிலையில் அமெரிக்கா முழுவதுமிருந்து பணமாகவும், உணவுப் பொருட்களாகவும், குடிநீராகவும், மக்கள் உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். ஃபேஸ் புக நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளார். பால்வேறு செல்வந்தர்களும் கவாய் தீவுக்கு நிதியுதவிகளை அனுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.