அமெரிக்காவில் தொடர்ந்து வெடிகுண்டு வெடித்த நிலையில், வெடிகுண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபர் உயிரிழப்பு என அறிவிப்பு!
வெடிகுண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஆறாவது முறையாக பார்சல் வெடிகுண்டு வெடித்த நிலையில், உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேன் அண்டோனியாவில் உள்ள ஃபெட் எக்ஸ் கொரியர் மையத்தில் பார்சல் குண்டு வெடித்தது. அதில் இருந்து ஆணிகள் மற்றும் இரும்புப் பொருட்கள் வெடித்துச் சிதறியதில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இதேபோல் ஆஸ்டின் நகரில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பொருளை செயலிழக்கச் செய்தனர். தொடர்ந்து ஆறாவது முறையாக நடந்த வெடிகுண்டு சம்பவங்களால் அதிகாரிகள் குழம்பி போன நிலையில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரை துரத்திச் சென்ற போது வெடிகுண்டை வெடிக்கச் செய்து அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.