அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக பேரணி!
மக்கள் ஆங்காங்கே திரண்டு பேரணி, அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு கொலாரடோவில் (Colorado) 13 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நினைவு தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி, அமெரிக்க பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி பேரணியாக திரண்டு துப்பாக்கிக்கு கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நியூயார்க்கில் நடைபெற்ற பேரணி ஒன்றில், “குழந்தைகளைக் காப்பாற்றுவோம், துப்பாக்கிகளை அல்ல” என்ற முழக்கங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.