அமெரிக்காவில் தந்தையை இழந்த மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்!
காவல்துறையாக கடமையாற்றும் போது அமெரிக்காவின் இண்டியானாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ராப் பிட்சின் (Rob Pitts) 5 வயது மகன் டகோட்டா (Dakota) தந்தையின் மரணத்திறகுப் பின் ஒருவாரம் கழித்து பள்ளிக்குத் திரும்பினான்.
பள்ளி செல்லும் முன் தமது தந்தையின் நண்பர்களில் யாராவது ஒருவர் பள்ளிக்கு தன்னை அழைத்துச் செல்ல முடியுமா என்று தாயைக் கேட்டான். இத்தகவல் பரவியதை அடுத்து 70க்கும் மேற்பட்ட இண்டியானா போலீசார் , பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்ல காத்திருந்தனர். அவன் தன் தந்தையின் பேட்ஜை அணிந்து பள்ளிக்குத் திரும்பினான்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.