அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் 306 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சேதத்தை சந்தித்துள்ளது!
அமெரிக்கா கடந்த ஆண்டு 306 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சேதத்தை சந்தித்துள்ளது. அமெரிக்க தேசிய கடலியல் மற்றும் சூழலியல் நிர்வாகம் எனப்படும் அரசு நிறுவனம் இதுதொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் அமெரிக்காவை தாக்கிய காத்ரீனா , வில்மா , ரீட்டா ஆகிய சூறாவளிகளால் 215 பில்லியன் டாலர்கள் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
அதை விஞ்சும் வகையில் கடந்த ஆண்டு 306 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள், ஹார்வி , மரியா மற்றும் இர்மா சூறாவளிகளால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு வெப்பநிலை 54.6 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பதிவான சராசரி வெப்பநிலையோடு ஒப்பிடும்போது 2.6 டிகிரி பாரன்ஹீட் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com