அமெரிக்கா:துப்பாக்கி முனையில் 2 நாட்களாக வீட்டில் அடைத்து பெண் சித்ரவதை..!!
அமெரிக்காவில் 2 நாட்களாக வீட்டில் அடைத்து துப்பாக்கி முனையில் சித்ரவதை செய்த காதலனை, சமயோசிதமாக சிந்தித்து பெண் ஒருவர் போலீசில் சிக்க வைத்துள்ளார்.
புளோரிடாவில் கரோலின் ரிச்லே (( Carolyn Reichle )) என்ற பெண்ணை, அவரது காதலன் ஜெரெமி பிளாய்ட் ((Jeremy Floyd)), வீட்டில் அடைத்து துன்புறுத்தி வந்தார். அவனின் பிடியில் இருந்து தப்பிக்க, வீட்டிலிருக்கும் நாய்க்குட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கால்நடை மருத்துவமனைக்கு கரோலின் சென்றார்.
கரோலினுடன் காதலனும் சென்றான். அங்கு தாம் ஆபத்தில் இருப்பதாகவும், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கால்நடை மருத்துவரிடம் கரோலின் கொடுத்துள்ளார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காதலன் ஜெரெமி பிளாய்ட் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்