தற்போது தமிழக அரசியலில் கருணாநிதி மறைவை அடுத்து 2 பெரிய அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று, ஸ்டாலினின் புதிய பொறுப்பு. இதன் மூலம் அவருடைய செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது போல தொண்டர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி மறைவால் வந்த அனுதாபமாகவும் இருக்கலாம், அல்லது ஸ்டாலினின் தனிப்பட்ட அணுகுமுறைகூட காரணமாக இருக்கலாம். தனது முதல் பேச்சிலேயே பாஜகவுடன் உறவு, கூட்டணி இல்லை என்பதை கட் அண்ட் ரைட்டாக தெரியும்படி வெளிப்படுத்திவிட்டார்.அதிமுகவில் பிளவு?இரண்டாவது பெரிய நிகழ்வு அதிமுகவில். திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க உட்கட்சி பூசலை. மதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வருகிறார்கள்.இப்படி தமிழகதில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப போவது யார் என்று மக்கள் விரும்பினாலும் சமீப காலமாக டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு ஒரு பயத்தை உண்டாக்குகின்றது..
தினகரன் அவர்களின் தெளிவான டென்ஷன் இல்லாத பேச்சு மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பொதுக்கூட்டங்களை டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். அதில் குவியும் மக்களின் கூட்டமும் ஒரு காரணம்.கூட்டம் நடத்தும் மாவட்டங்களில் எல்லாம் தினகரனின் தெரிவிப்பதும், பேசுவதும், உறுதிகூறுவதும், நம்பிக்கை தெரிவிப்பதும் எல்லாமே வருகின்ற தேர்தல்கள் பற்றியது தான்.
பொதுவாகவே தினகரன் பேசினால் அமைதி முகத்துடன், பரபரப்பு, டென்ஷன் இவைகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அதே சமயத்தில் எல்லா கேள்விகளுக்கும் மிக மிக திடமாக பதில் கூறுவார். அப்படித்தான் இப்போதும் கூறி வருகிறார். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் என்று கூறி வருகிறார். எந்த தேர்தல் வந்தாலும் எங்கே போட்டியிட்டாலும் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என ஆணித்தரமாக இவர் பேசுவதை மக்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆழ்ந்து கவனிக்கின்றனர்.
இவரின் இப்படியான பேச்சு தான் பலம் பெரும் கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்குகின்றது..
DINASUVADU