அத்துமீறல்களை தடுக்க சீன அரசின் முயற்சி..!!
பீஜிங் :
சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களின் வீடுகளில் க்யூ.ஆர்., கோடுகளை அந்நாட்டு ராணுவம் பொருத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷின்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களின் வீடுகளின் முன் க்யூ.ஆர்., கோடு உடனான அட்டை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த க்யூ.ஆர்., கோடினை தங்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் குறித்த முழு விபரத்தையும் பெற முடியும்.
இந்த க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும்.
இதுபற்றி சீன மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் சோபி ரிச்சர்ட்சன் கூறுகையில், ஷின்ஜிங் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுப்பதற்காகவே சீன அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. இத்தகைய அத்துமீறல்களை தடுத்து, வலுவான சீனாவை உருவாக்குவதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.