அதிர்ச்சி..19,00,000 வாக்காளர்கள் எங்கே…காணாமல் போகச் செய்த முதல்வர்…நடிகை பரபரப்பு..!!
ஆந்திராவில் 19 லட்சம் வாக்காளர்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போக செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகையுன ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக கூறுகிறார்.அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்து உள்ளதா என்று கேள்வி கேட்டு, நலத்திட்டங்கள் கிடைத்தது என்றால் எண் ஒன்றை அழுத்த கூறுகின்றனர். இதேபோல் அரசின் செயல்பாடு திருப்தி இல்லை என்றால் எண் இரண்டை அழுத்த கூறுகின்றனர்.
மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று செல்போனில் கருத்து கேட்டு வருவதாக கூறுவது ஏமாற்று வேலை. அரசு செயல்பாடு திருப்தி இல்லை என்று பதிவு செய்த 19 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து சந்திரபாபு நாயுடு நீக்கி உள்ளார்.
எனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய நிதி அளிப்பதில்லை. அரசு பெண்கள் பள்ளியில் போதுமான கழிவறை இல்லை. எதிர்க்கட்சி என்பதால் எனது தொகுதியை புறக்கணித்து வருகிறார்கள். இருந்தாலும் எனது சொந்த செலவில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
DINASUVADU