அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு கூட்டணி தேவையில்லை….மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்….!!
பலவீனமான கட்களுக்குதான் கூட்டணி தேவை என்றும், அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு கூட்டணி தேவையில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து, நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது என கூறினார். அதிமுக-தினகரனுடன் கூட்டணி என்பது வதந்தி என கூறிய அவர், திமுகவுடன் தினரகரன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.