அதிமுக பேனருக்கு மக்கள் எதிர்ப்பு..!!
சென்னையில் சிக்னலை மறைத்து அதிமுகவினரால் வைக்கப்பட்ட பேனர் மீது ஸ்ப்ரே அடித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை குரோம்பேட்டை அருகே போக்குவரத்து சிக்னலை மறைத்து அதிமுகவினர் பெரிய அளவில் பேனர் வைத்துள்ளனர். இதனால் சிக்னல் தெரியாமல் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் சிலர் பேனரின் மீது “சிக்னல் மறைத்து பேனர் வைத்ததற்கு பதில் நடு ரோட்டில் வைக்கலாமே” என்று ஸ்பிரேவால் எழுதி வினோதமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.சட்டத்தை இயற்றியவர்களே சட்டத்தை மதிக்காமல் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டிபோட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக, பொதுமக்களின் உயிர்களை பறிக்கும் வகையில் பேனர் வைப்பது தொடர்கதையாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU