அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்புமனுதாக்கல் செய்தார்
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முதலில் திமுக சார்பில் மருதுகணேஷ் , பிறகு சுயேச்சை வேட்பாளராக T.T.V.தினகரன் அவர்களை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், விருப்பமனுவை தாக்கல் செய்த முன்னால் எம்பி பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர்.