“அதிமுக கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்” என் மீது வழக்கு தொடுக்கட்டும் ஸ்டாலின் அதிரடி..!!

Default Image

சென்னை  காற்றாலை போலிக் கணக்கு ஊழல் விவகாரத்தில், தைரிய மிருந்தால் அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்திற்குள் என் மீது வழக்குத் தொடரட்டும்! இல்லை யேல் நான் வழக்குத் தொடர்வேன்! என, திமுக  தலைவர் மு.க.ஸ்டா லின் எச்சரித்துள்ளார்.

Image result for அண்ணா அறிவாலயத்தில்நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களின்கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முக.ஸ்டாலின் : இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மின்சாரத்தில் முறைகேடாக பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு நீண்ட அறிக்கையை நான் வெளியிட்டேன். அதற்குரிய விளக்கத்தை, மின்துறை அமைச்சர் தங்கமணி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு விளக் கத்தையும் சொல்ல முன் வராமல், அபாண்டமான, அவதூறான ஒரு பொய்யான குற்றச் சாட்டை பரப்புகிறார்.அப்படி அவர் சொல்லக்கூடிய குற்றச் சாட்டுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சொல்லட்டும் ஆனால் நான் நேற்று இரவு, என் கையில் இருக்கும் இந்த முழுமையான ஆதாரத்தை வெளியிட்டு, இதுகுறித்து உடனே விசாரணை நடத்திட வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன் என்றார் முக.ஸ்டாலின்.

Image result for அமைச்சர் தங்கமணிதொடர்ந்து பேசிய முக.ஸ்டாலின் ஏற்கனவே, குட்கா பிரச்சினையில், அதனை முதன் முதலாக நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பி, அதுகுறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நான் தெளிவாக எடுத்துச் சொல்லி யிருந்தேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருப்பது போல் எந்தவிதத் தவறும் நடைபெற வில்லை. எனவே, தவறான கருத்தைச் சொல்லியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மீது நான் வழக்குப் போடுவேன் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சொன்னார். ஆனால், அவர் இதுவரையில் என்மீது வழக்குப் போடவில்லை. நாங்கள் தான் குட்கா ஊழல் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டோம். தற்போது, குட்கா ஊழல் பிரச்சினை சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறதென்பது, நாட்டிற்கு நன்றாகத் தெரியும். எனவே, மின் துறை அமைச் சராக இருக்கக் கூடிய தங்கமணி அவர் களை நான் கேட்டுக் கொள்ள விரும்பு வது, காற்றாலை முறைகேடு தொடர் பான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுதாவது, அவர் சொன்ன படி, என்மீது வழக்குப் போட வேண்டும். ஒரு வார காலம் நான் காத் திருப்பேன். அந்த ஒரு வார காலத் திற்குள், அவர் என்மீது வழக்குப் போடவில்லை என்று சொன்னால், நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, எப்படி குட்கா ஊழல் பிரச் சினை சி.பி.ஐ. வரை சென்று வழக்கு விசா ரணை நடந்து கொண்டி ருக்கிறதோ அதுபோல், இதையும் கொண்டு சென்று, இந்த ஊழல் பிரச்சினைக்கு நல்ல தொரு பரிகாரத்தை நான் நிச்சயமாகக் காண்பேன்.

Image result for வழக்குஎன்மீது, வழக்குப் போடுவேன் என்று சொன்ன தங்கமணி அவர்கள், உடனடியாக வழக்குப் போடத் தயாரா? என்ற அந்தக் கேள்வியை மாத்திரம் கேட்டு, இந்த விளக் கத்தை நான் உங்கள் மூலமாக அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முக.ஸ்டாலின்.

Image result for கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்

தொடர்ந்து பேசிய அவர் இந்த ஆட்சியில் டி.ஜி.பி. அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தலைமைச் செயலாளர், அமைச் சருடைய வீடுகளில் எல்லாம் சோதனை நடந்துள்ளது. அதை யெல்லாம், வேடிக்கை பார்த்து விட்டு, வெட்கம், மானமில்லாமல் இன்னும் அந்தப் பதவிகளில் ஆட்சி யாளர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை. அதனால்தான், நாங்கள் சேலத்தில் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தி, எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறோம். மேலும், வருகின்ற 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள எல்லா நகராட்சிகளிலும் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டி ருக்கக் கூடிய கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் பற்றி விளக்கிச் சொல் லக்கூடிய அளவிற்கு, தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதற்கு தி.மு. கழகத்தின் சார்பில் முடிவெடுத் துள்ளோம் என்று முக.ஸ்டாலின்  பேட்டி யளித்தார்.

DINASDUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Manipur riot - Live
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat