அதிமுக ஏழை, எழிய மக்களுக்கான கட்சி – மக்களவைத்துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்…….!!
அதிமுக ஏழை, எளிய மக்களுக்கான கட்சி என, மக்களவைத்துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதை சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக ஒரு போர்க் கப்பல் என தெரிவித்தார். பிற கட்சிக்கு செல்பவர்களால் அதிமுகவிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அவர் கூறினார்.