அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் : ஆர்கே நகர் வேட்பாளர் யார்?
அதிமுக இரு அணிகளும் இணைந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை எனும் மைத்ரேயன் ட்வீட் போலவே அதிமுக ஆர்.கே நகர் இடைதேர்தலில் செயல்பட்டுவருகிறது. ஒரு பக்கம் ஏற்கனேவே ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனனை நிற்க வைக்கலாம் என ஒரு தரப்பும், நிற்க வைக்க கூடாது என இன்னொரு தரப்பும் கூறி செயற்குழு கூட்டத்தில் கூச்சல் நிலவியது பிறகு விருப்பமனுவை தாக்கல் செய்யுங்கள் தலைமை முடிவு செய்யும் எனகூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட பாலகங்காவும் விருப்பமனுவை தாக்கல் செய்தார். இதனால் அதிமுக கட்சிக்குள் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது. அதிமுக இடைதேர்தல் வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்பதாக தலைமை அறிவித்து இருந்தது. தற்போது இன்று அறிவிப்பார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் யார் அதிமுக சார்பில் நின்றாலும் ஒரு தரப்பு அரசியல் காழ்ப்னர்ச்சி காரணமாக சதிவேலைகளை செய்வார்களோ என அச்சம் அதிமுகவில் உருவாகியுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தாக்கல் செய்த அணிக்கே கிடைத்தது, ஆர்கே நகர் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர், மேலும் முன்னால் அமைச்சர் அப்படி இருந்தும் அவரை வேட்பாளராக மீண்டும் நிறுத்த வாய்ப்பு மறுக்கபடுவது, அதிமுகவில் கூச்சல் குழப்பம் இருப்பதை உறுதி செய்வதுபோல் உள்ளது.